குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க பூமி பூஜை: சேர்மன் துவக்கி வைப்பு

குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான பூமி பூஜையை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.;

Update: 2022-04-06 09:45 GMT

குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் பூமி பூஜையை நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையத்தில் உயர்மட்ட பாலம் பூமி பூஜையை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார்.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலையில் அப்பன் மேடு பகுதியில் கோம்பு பள்ளத்தில் தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலங்களில் சிறிய மழை என்றாலும் கோம்பு பள்ளம் கழிவுநீர் தரைமட்ட மட்ட பாலத்தின் மேலே பாய்ந்து ஓடும் நிலை ஏற்படும். இதனால் பாதை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நீண்ட வருடமாக பல அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

புதியதாக பொறுப்பேற்ற சேர்மன் இதனை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக மூலதன மானிய நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று இதற்கான பூமி பூஜையில் சேர்மன் விஜய்கண்ணன் தலைமை வகித்து, பணிகளை துவக்கி வைத்தார். கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, சியாமளா, கனகலட்சுமி,விஜயா, வேல்முருகன், ராஜு, நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News