பவானியில் கரையை தொட்டபடி செல்லும் காவிரி வெள்ளம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பால், பவானியில் கரையை தொட்டபடி காவிரி ஆற்றில் வெள்ளம் செல்கிறது.

Update: 2021-11-17 03:15 GMT

கரையை தொட்டபடி செல்லும் காவிரி வெள்ளம்.

மேட்டூர் அணை நிரம்பியதால் திறக்கப்படும் காவிரி ஆற்றின்  உபரிநீர்,  பவானி நகராட்சி பகுதியில் கரையோரத்தில் உள்ள வீடுகளின் அருகாமையில் செல்கிறது. பவானி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள காவேரி நகர், கந்தன் நகர், தினசரி மார்க்கெட், மீனவர் தெரு, பாலக்கரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

காவிரி கரைக்கு மிக அருகாமையில் உள்ள இப்பகுதி மக்கள் வெள்ளம் வரும்போது,  வீட்டை விட்டு வெளியேறுவதும்,  வெள்ளம் வடிந்த பின்னர் குடியேறுவதுவதுமாக குடியிருப்புவாசிகள் உள்ளனர். பவானி ஆற்றில் வெள்ளம் வரும்போது சோமசுந்தரபுரம், பழனிபுரம், சீனிவாசபுரம் எக்ஸ்டன்சன், பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் காவிரி கரையோர பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால், பவானி நகராட்சி கரையோரத்தில் உள்ள படித்துறைகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது. உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடிக்கு மேல் செல்லும் போது கரையோர வீடுகளை தண்ணீர் சூழும் நிலை ஏற்படும். இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை, ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News