குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் அனுசரிப்பு
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.;
குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. தலைமை ஆசிரியை கவுரி தலைமை வகித்தார். பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தங்கங்கள், முகக் கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் ஆகியவற்றை பி.டி.ஏ., தலைவர் காந்தி நாச்சிமுத்து வழங்கினார். ஆசிரியர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.