குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் பகத்சிங் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் பகத்சிங் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-09-28 13:45 GMT

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில், அறிவியல் கண்டுபிடிப்பு சாதனையாளர்கள், பிரபல அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரது பிறந்த நாள் விழாக்கள் மாணவ, மாணவியர்களுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பகத்சிங் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தங்கங்கள், முகக் கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன.

நிர்வாகிகள் சித்ரா மனோன்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News