சுயேச்சையாக மாறி கட்சிக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த திமுக விசுவாசி
கட்சி தலைமை மறுத்ததால், குமாரபாளையத்தில் திமுகவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தார் திமுக விசுவாசி.;
குமாரபாளையத்தில் திமுகவிற்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் விஜய்கண்ணன், 34. இவர் திமுகவின் விசுவாசியாக இருந்து, பல வருடங்களாக கட்சி நிகழ்ச்சிகளில், போராட்டங்களில் பங்கேற்று வந்தார். இவர் 31வது வார்டில் போட்டியிட சீட் கேட்டார். கட்சி தலைமை மறுக்கவே நேற்று 31வது வார்டு பகுதிக்கு சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இது பற்றி விஜய்கண்ணன் கூறியதாவது:
கட்சி விசுவாசியாக இருந்தும் எனக்கு சீட் வழங்கப்படவில்லை. சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். நான் வெற்றி பெற்றாலும் திமுகவில் இணைந்துதான் செயல்படுவேன். நகரின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என அவர் கூறினார்.