குமாரபாளையம் பஸ் நிலையத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாத யாசகர்கள், ஆதரவற்றோர்
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் யாசகர்கள், ஆதரவற்றோர் எதைபற்றியும் கவலைப்படாமல் தூங்கி வருகின்றனர்.
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இடைப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் தற்காலிக மார்க்கெட் அமைக்க இருப்பதால், இடைப்பாடி பஸ்கள், சேலம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாள் ஒன்றுக்கு திருப்பூர், கோவை, கரூர், பெருந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பல தொழில் நிறுவனத்தை சேர்ந்த பேருந்துகள், வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்ல குமாரபாளையம் பேருந்து நிலையத்திற்கு வருகின்றன. பல ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல தனியார் கல்வி நிறுவன வாகனங்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
பேருந்து நிலையத்தில் ஒரு பகுதி மார்க்கெட் அமைக்கும் பணிகள், மறுபக்கம் இட நெருக்கடியில் பஸ் ஏற காத்திருக்கும் பயணிகள் என பஸ் ஸ்டாண்ட் வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் கடைகள் முன்பும், இரு பகுதிகளை இணைக்கும் நடைபாதை காலி இடங்களிலும் யாசகர்கள், ஆதரவற்றோர் எதை பற்றியும் கவலைப்படாமல் பகலில் கூட நடக்க வழியில்லாமல் தூங்கி வருகின்றனர். இவர்களை வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.