தடுப்பணை கட்டுவது தொடர்பாக பள்ளிபாளையம் பி.டி.ஓ. ஆர்வம் காட்டாமல் ஏமாற்றி வந்ததால், பொதுமக்கள் அதிருப்தி

குமாரபாளையம் அருகே தடுப்பணை கட்டுவது தொடர்பாக பள்ளிபாளையம் பி.டி.ஓ. ஆர்வம் காட்டாமல் ஏமாற்றியுள்ளார் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.;

Update: 2025-04-29 12:28 GMT

தடுப்பணை கட்டுவது தொடர்பாக பள்ளிபாளையம் பி.டி.ஓ. ஆர்வம் காட்டாமல் ஏமாற்றி வந்ததால், பொதுமக்கள் அதிருப்தி

குமாரபாளையம் அருகே தடுப்பணை கட்டுவது தொடர்பாக பள்ளிபாளையம் பி.டி.ஓ. ஆர்வம் காட்டாமல் ஏமாற்றியுள்ளார் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது:

குமாரபாளையம் அருகே இறந்தவர்களின் நினைவாக 75க்கும் மேற்பட்டவர்கள் நினைவுக்கல் நட வந்ததால் இரு தரப்பினரிடையே மோதல் சூழல் உருவானதையடுத்து, தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தை முடிவில் குறிப்பிட்ட இடத்தில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு பூஜை போட்டு நடுகல் வைக்க ஏற்பாடுகள் நடந்தன. பண்ணைக்குட்டை அமைக்கவும், தடுப்பணை கட்டவும் அனுமதி கேட்டோம். இது குறித்தும் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. குறிப்பிட சமூகத்தினருக்கு வழித்தடம் பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆர்.டி.ஓ. தலைமையில் எட்டு முறை நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு முறை மட்டுமே பி.டி.ஓ. கிரிஜா பங்கேற்றார். அதிலும் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சரியான பதிலும் தரவில்லை. தடுப்பணை சம்பந்தமாக, தாசில்தார் கூறியபடி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாக அதிகாரிகளை, பொதுமக்கள் சந்தித்து, தடுப்பணை சம்பந்தமாக மனு கொடுத்தோம். அதை கண்ட அதிகாரிகள், இதை பள்ளிபாளையம் பி.டி.ஓ. வசம் கொடுத்தால் கூட போதுமானது. எதற்கு மாவட்ட அலுவலகம் வரை வருகிறீர்கள்? என்று கேட்டனர். இதன் பின்புதான், பள்ளிபாளையம் பி.டி.ஓ. கிரிஜா வசம் நாங்கள் கொடுத்த மனு சம்பந்தமாக எவ்வித தகவலும், அவர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்தது. இது சம்பந்தமாக நடந்த 8 கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு முறை மட்டுமே பி.டி.ஓ. கிரிஜா பங்கேற்றார். மற்ற பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்கவில்லை. இதில் ஆர்வம் காட்டாத பி.டி.ஒ. செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தடுப்பணை கட்ட 6 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இத்தனை மாதமாக வராத பி.டி.ஓ., இன்று வந்து ஆய்வு செய்துள்ளார். பொதுமக்கள் கேட்ட இடத்தில் தடுப்பணை கட்ட முடியாது, 100 மீட்டர் தாண்டிதான் கட்ட முடியும் என்றும், விவசாயிகள் மற்றும் இளைஞர்களை ஒருமையில் வா போ என்று பேசி விட்டு சென்றுள்ளார். இவர் மீது மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்கக் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News