குமார பாளையம் பாண்டுரங்கர் கோவிலில் பாலாலய வழிபாடுகள் நடந்தது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் புனருத்தாரண பாலாலய வழிபாடுகள் நடைபெற்றது.;

Update: 2022-02-20 13:00 GMT

குமார பாளையம் பாண்டுரங்கர் கோவில் பாலாலயம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவிலில் ஜூலை 1, 1988, ம் நாளில் ராகவேந்திர சுவாமியின் பக்தர் பத்மானந்த குருஜி தலைமையிலும், ஜூன், 27, 2002, ம் நாளில் ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் தலைமையிலும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தற்போது பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார், ஆண்டாள் நாச்சியார், ஆஞ்சநேயர் மற்றும் விமானங்களுக்கு திருப்பணி நடைபெறவுள்ளதால், புனருத்தாரண பாலாலய வழிபாடுகள் யாகசாலை பூஜைகளுடன் நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பாண்டுரங்கர் தேவஸ்தான பஜனை குழுவினர், விட்டல் ரெகுமாயி பக்தசேவா பஜன் மண்டல் குழுவினர், பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News