குமாரபாளையத்தில் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி மறைவுக்கு மலரஞ்சலி
குமாரபாளையத்தில் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி மறைவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.;
குமாரபாளையத்தில் பா.ஜ.க. முன்னாள் நிர்வாகி சேகரின் மறைவுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்ட பா.ஜ.க. முன்னாள் விவசாய அணி துணைத் தலைவரும், முன்னாள் நகர பொது செயலருமான சேகர் மறைவுக்கு, குமாரபாளையம் பா.ஜ.க. சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் பலரும் பங்கேற்று சேகரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். அதன்பின் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சேகரின் பணிகள், சேவைகள் குறித்து ஒவ்வொருவரும் பேசினார்கள். . மாவட்ட, நகர நிர்வாகிகள், மகளிரணியினர் பலரும் பங்கேற்றனர்.