ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு!
குமாரபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது.
ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு - குமாரபாளையத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா மற்றும் திருவிளக்கு வழிபாடு, அன்னதானம் நடந்தது.
குமாரபாளையம் ஐயப்ப சுவாமி பிரார்த்தனை மண்டபம் சார்பில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா முக்கிய வீதிகளின் வழியாக நடந்தது. பக்தர்கள் வழிநெடுக நின்று சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து சுவாமிக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, 108 திருவிளக்கு வழிபாடு மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.