சபரிமலையில் இறந்த பக்தர்களின் உடலை சொந்த ஊரில் சேர்த்த ஐயப்பா சேவா சங்கம்

சபரிமலையில் இறந்த பக்தர்கள் இருவர் உடலை அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினர் அவர்களது சொந்த ஊருக்கு இலவச ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர்.

Update: 2021-12-14 13:15 GMT

சபரிமலை சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த மாதேஸ்வரன்.

சபரிமலையில் இறந்த பக்தர்கள் இருவர் உடலை அகில பரத ஐயப்பா சேவா சங்கத்தினர் அவர்களது சொந்த ஊருக்கு ஐயப்பா சேவா சங்கம் இலவச ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர்.

குமாரபாளையம், அம்மன் நகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 48. எலக்ட்ரிசியன். இவர் 8வது ஆண்டாக சபரிமலை சென்றிருந்தார். நேற்றுமுன்தினம் பம்பையிலிருந்து சபரிமலை ஏறும் வழியில் சரங்குத்தி என்ற இடத்தில் மாரடைப்பால் இறந்தார்.

இதே போல் சிதம்பரத்தை சேர்ந்தவர் இளங்கோவன், 47. அரசு போக்குவரத்து கழகத்தில் தலைமை மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவர் நேற்றுமுன்தினம் சபரிமலை சென்ற போது, அப்பாச்சி மேடு பகுதியில் மாரடைப்பால் இறந்தார்.

அகில பரத ஐயப்பா சேவா சங்கத்தினர் தூத்துக்குடியை சேர்ந்த கனகராஜ், விழுப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் இருவரும் இருவரது உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு போய் சேர்க்கும் வகையில் ஐயப்பா சேவா சங்கம் இலவச ஆம்புலன்ஸ் மூலம் ஏற்பாடு செய்தனர். இந்த தகவலை நாமக்கல் மாவட்ட அகிலபாரத ஐயப்பா சேவா சங்க செயலர் ஜெகதீஸ் தெரிவித்தார்.

Tags:    

Similar News