சபரிமலையில் ஐயப்ப சேவா சங்க அலுவலகம் திறப்பு விழா

கேரளா மாநிலம் சபரிமலையில் ஐயப்ப சேவா சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2021-11-17 16:45 GMT

சபரிமலை ஐயப்ப சேவா சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சேவை மைய அலுவலகம் திறக்கப்பட்டு, மூன்று வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சபரிமலை சீசன் நேற்று தொடங்கியதையடுத்து, சபரிமலையில் நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சேவை மைய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கேரளா அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பின்ர்கள், திருவாங்கூர் தேவஸ்தானம் தலைவர் மற்றும் உறுப்பின்ர்கள், கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி, சபரிமலை காவல் கண்காணிப்பாளர், காவலர்கள், அகில பாரத ஐயப்பா சேவா சங்க முகாம் அலுவலர் பாலசுப்ரமணியம், சங்க நிர்வாகிகள் மற்றும்  தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News