ஐயப்ப சேவா சங்க 2ம் ஆண்டு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை

பள்ளிபாளையம் ஐயப்ப சேவா சங்க 2ம் ஆண்டு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது.

Update: 2021-12-27 17:00 GMT

பள்ளிபாளையம் ஐயப்ப சேவா சங்க 2ம் ஆண்டு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஐம்பெரும் விழாவில் மாவட்ட செயலர் ஜெகதீஸ் இலவச வேட்டி சேலைகள் வழங்கி சேவைப்பணிகளை துவக்கி வைத்தார்.

பள்ளிபாளையம் அகில பாரத ஐயப்ப சேவா சங்க 2ம் ஆண்டு பஜனை மற்றும் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஐம்பெரும் விழா, சங்க தலைவர் சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு யாகம், அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்குதல், மகா திருவிளக்கு பூஜைகள், பஜனை, உபசார வழிபாடு, ஐயப்பனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட தலைவர் பிரபு சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட செயலர் ஜெகதீஸ் இலவச வேட்டி சேலைகள் வழங்கி சேவைப்பணிகளை துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செயலர் குமார் நிகழ்சிகளை தொகுத்து வழங்கினார். 

Tags:    

Similar News