குமாரபாளையத்தில் ஐயப்பா சேவா சங்க மத்திய நிர்வாகிக்கு பாராட்டு

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தில் மத்திய செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்றவருக்கு, குமாரபாளையம் நகர முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.;

Update: 2021-10-26 05:00 GMT

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தில் மத்திய செயற்குழு உறுப்பினராக பொறுப்பேற்ற ஜெகதீசுக்கு முக்கிய பிரமுகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் மத்திய நிர்வாகிகள் புதியதாக நியமனம் செய்யப்பட்டனர். புதிய தலைவராக சென்னையை சேர்ந்த ஐயப்பன், பொது செயலராக திருவனந்தபுரத்தை சேர்ந்த வேலாயுதநாயர், பொருளராக மதுரையை சேர்ந்த விஸ்வநாதன், துணை தலைவர்கள் ஆறு பேர், துணை செயலர்கள் ஆறு பேர், சிறப்பு உறுப்பினர்கள் இருவர், செயற்குழு உறுப்பினர்கள் 25 பேர்  உள்ளிட்ட 42 பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து  மத்திய துணை தலைவராக நாமக்கல் பாலசுப்ரமணியம், மத்திய செயற்குழு உறுப்பினராக குமாரபாளையம் ஜெகதீஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள குமாரபாளையம் ஜெகதீசுக்கு, விடியல் ஆரம்பம் தலைவர் பிரகாஷ், சேவற்கொடியோர் பேரவை தலைவர் பாண்டியன், உலக பொருளாதார மையம் தளபதி லயன்ஸ் சங்க தலைவர் சண்முகசுந்தரம், உள்ளிட்ட பலரும் நேரிலும், தொஅலைபேசியிலும்  வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News