சபரிமலையில் இறந்தவர்களின் உடல்களை சுமந்து வந்த அய்யப்ப சேவா பக்தர்கள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து பம்பை வரை இறந்தவர்களின் 3 உடல்களை நாமக்கல் மாவட்ட அய்யப்ப சேவா சங்கத்தினர் சுமந்து வந்தனர்.
நாமக்கல் மாவட்ட அய்யப்பா சேவா சங்கத்தினர் கேரளா மாநிலம், சபரி மலையில் அன்னதானம் வழங்கவும், சேவை செய்யவும் சென்றுள்ளனர். பெங்களூரை சேர்ந்த சாம்பசிவமூர்த்தி (வயது 45) மலை மேல் உயிரிழந்ததால், இவரது உடலை நாமக்கல் மாவட்ட அய்யப்ப சேவா பக்தர்கள் மாவட்ட துணை தலைவர் ராஜா தலைமையில் சன்னிதானம் முதல் பம்பை வரை ஸ்ட்ரெட்சரில் தூக்கியவாறு கொண்டு வந்து சேர்த்தனர். இதே போல் அடையாளம் தெரியாத இரு நபர்கள் உடல்களையும் கோவில் முதல் பம்பை வரை கொண்டு வந்து சேர்த்தனர். இவர்களை நிர்வாகிகள், அய்யப்ப பக்தர்கள் பாராட்டினர்.