குமாரபாளையத்தில் மாவட்ட பாஜக.,வின் ஆயுஷ்மான் பாரத் தினவிழா
குமாரபாளையத்தில் பாஜக மருத்துவ பிரிவு சார்பில் ஆயுஷ்மான் பாரத் தின விழா கொண்டாடப்பட்டது.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பாஜக மருத்துவ பிரிவு சார்பில் ஆயுஷ்மான் பாரத் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழா தமிழ்நாடு மருத்துவ பிரிவு மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பிரேம்குமார் மற்றும் மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் சாம் சுந்தர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட மருத்துவ பிரிவு செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் மற்றும் குமாரபாளையம் நகர பாஜகவினர் இணைந்து, குமராபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 100 நோயாளிகளுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கி அவர்களுக்கு பால், பிஸ்கட் ஆகிய உணவுப் பொருட்கள் வழங்கினர்.