குமாரபாளையத்தில் மா.கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம்

குமாரபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-09-19 14:15 GMT

குமாரபாளையத்தில் சி.பி.எம். சார்பில் நடைபெற்ற 7வது மாநாடு சார்பில், மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் வடக்கு காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது மாநாடு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 8வது வார்டு கிளை சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு நகர செயலர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வார்டு முழுவதும் ஊர்வலமாக வந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சாயப்பட்டறைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் நகராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, நகர கமிட்டி சக்திவேல், காளியப்பன், சண்முகம், வெங்கடேசன், மேகநாதன், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News