தவெக சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற குமாரபாளையம் மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.;
த.வெ.க. சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற குமாரபாளையம் மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
குமாரபாளையம் சமூக ஆர்வலர் சரவணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலமில்லாமல் இறந்தார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள். இதில் 2வது மகன் நேதாஜி, 10ம வகுப்பு பொதுத்தேர்வில் 459 மதிப்பெண்கள் பெற்றார். இதனை பாராட்டும் வகையில், நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அவரது வீட்டிற்கு நேரில் சென்று, மாணவனின் தாயார் சுஜாதாவிடம் 3 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதில் உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலாளர் விஜயலட்சுமி, சமூக ஆர்வலர் சித்ரா, நகர தலைவர் சக்திவேல், நிர்வாகிகள் வேல்முருகன், மகாபிரபு, மோகன்ராஜ், கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.