அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு..!
குமாரபாளையம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.;
அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
குமாரபாளையம் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆவணி வெள்ளிக்கிழமை நாளையொட்டி குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. இதே போல் கோட்டைமேடு காளியம்மன் கோயில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோயில்கள், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோயில், அங்காளம்மன் கோயில்கள், மாரியம்மன் கோயில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோயில், வாசுகி நகர் சக்தி மாரியம்மன் கோயில் நேதாஜி நகர் சந்தோசி அம்மன் கோயில் , அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோயில் , பட்டத்தரசியம்மன் கோயில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோயில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோயில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். எந்த அளவிற்கு பூஜையறையில் விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்களோ? அதே அளவிற்கு நிலை வாசலையும் சுத்தம் செய்து மஞ்சள் தடவி குங்குமம் வைத்து மலர்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி வழிபாடு செய்வதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில் அம்பிகையை நினைத்து நாம் வழிபாடு செய்யும் பொழுது அந்த வழிபாட்டின் பலனால் நமக்கு நன்மைகள் பல உண்டாகும். அதிலும் குறிப்பாக நாம் செய்த தீவினைகள் அனைத்தையும் நீக்கி நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்களை அகற்றக் கூறிய அம்மனின் மந்திரத்தின் பல நாள் பலனை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.