நின்ற ஆட்டோ மீது டூவீலர் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து மூன்று நபருக்கு படுகாயம்
குமாரபாளையம் அருகே நின்ற ஆட்டோ மீது டூவீலர் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து மூன்று நபர்கள் படுகாயமடைந்தனர்,;
நின்ற ஆட்டோ மீது டூவீலர் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து மூன்று நபருக்கு படுகாயம்
குமாரபாளையம் அருகே நின்ற ஆட்டோ மீது டூவீலர் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து மூன்று நபர்கள் படுகாயமடைந்தனர்,
குமாரபாளையம் அருகே நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 48. ஷேர் ஆட்டோ ஓட்டுனர். இவர் மார்ச். 8ல், மாலை 04:00 மணியளவில், வட்டமலை பகுதியிலிருந்து, குமாரபாளையம் நோக்கி, பெண் மற்றும் சிறுமி ஆகிய இருவரை ஏற்றிக்கொண்டு, வட்டமலை பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, வேகமாக வந்த டூவீலர் ஓட்டுனர், நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோ கவிழ்ந்து, வெங்கடேஷ், பயணிகள் ரத்னா, 52, ஸ்ரீதேவி, 5, ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர். இவர்கள் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதும் குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான ஹோண்டா யூனிகார்ன் டூவீலர் ஓட்டுனர், மேட்டூர் தாலுகா, நைனா கவுண்டனூரை சேர்ந்த மின்வாரிய கேங்மேன் விஜய், 27, என்பவரை கைது செய்தனர்.