குமார பாளையம் அருகே கொலை முயற்சி வழக்கில் தறி தொழிலாளி கைது

குமாரபாளையம் அருகே கொலை முயற்சி வழக்கில் தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-05-23 14:45 GMT

கைது செய்யப்பட்ட ராஜசேகரன்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தில் வசிப்பவர் மாரிமுத்து (வயது 50. ) தறி கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் ( 43,) இவரும்  தறி கூலி தொழிலாளி தான். மாரிமுத்து, ராஜசேகரனுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார். நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் ராஜசேகரனிடம் கடனாக கொடுத்த பணம் குறித்து மாரிமுத்து கேட்க, ராஜசேகரன் தகாத வார்த்தை பேசியதுடன், குவார்ட்டர் பாட்டிலை உடைத்து, அதை கொண்டு மாரிமுத்துவை நெற்றி, பின் தலை, இடது நெஞ்சு, ஆகிய இடங்களில் குத்தியதால் பலத்த காயம் ஏற்பட்டு, குமாரபாளையம் ஜி.ஹெச்சில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார் ராஜசேகரனை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News