மனநலம் பாதித்தவர் தாக்குதலில் ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

பள்ளிபாளையத்தில், மன நலம் பாதித்தவர் தாக்கியதில் ஒருவர் பலியானார்; இன்னொருவர் படுகாயமடைந்தார்.;

Update: 2021-12-08 03:30 GMT

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியில்,  முதியவர் ஒருவர் கல்லால் தாக்கிய நிலையில் இறந்து கிடந்தார். பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த இன்னொரு நபர் படுகாயமடைந்த நிலையில் இருந்தார். போலீசார் விசாரணையில் இறந்தவர் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த வேலப்பன்,75,  என்பதும், படுகாயமடைந்தவர் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி, 65, என்பதும் தெரியவந்தது.

இருவரும், விசைத்தறி கூலித்தொழிலாளிகள். நேற்றுமுன்தினம் அதிகாலை 03:00 மணியளவில் டீ குடிக்க வந்தபோது மனநலம் பாதிக்கப்பட்ட குமாரபாளையத்தை சேர்ந்த கோகுல்ராஜ், 23, என்பவர்,  இவர்களை கல்லால் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில்,  வேலப்பன் இறந்துவிட, பழனிச்சாமி சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து,  பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பள்ளிபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags:    

Similar News