ஏ.டி.எம். கார்டு மோசடி செய்த நபரை 5 மாதங்களுக்கு பின் கைது செய்த போலீசார்

குமாரபாளையத்தில் ஏ.டி.எம். கார்டு மோசடி செய்த நபரை குமாரபாளையம் போலீசார், 5 மாதங்களுக்கு பின் கைது செய்தனர்.;

Update: 2025-05-10 14:56 GMT

ஏ.டி.எம். கார்டு மோசடி செய்த நபரை

5 மாதங்களுக்கு பின் கைது செய்த போலீசார்

குமாரபாளையத்தில் ஏ.டி.எம். கார்டு மோசடி செய்த நபரை குமாரபாளையம் போலீசார், 5 மாதங்களுக்கு பின் கைது செய்தனர்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி, 48. இவர் 2024, டிச. 27ல், குமாரபாளையம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். க்கு சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். பணம் வராததால், அருகில் இருந்த வட இந்தியர் ஒருவரிடம் கார்டை கொடுத்து, பணம் எடுத்து தர சொல்லியுள்ளார். அவரும் முயற்சி செய்து பணம் வரவில்லை என்று, முத்துசாமி சொன்ன ரகசிய எண்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு, தன்னிடம் இருந்த வேறு ஒரு கார்டை கொடுத்து ஏமாற்றி உள்ளான். வீட்டிற்கு சென்றதும், 2,15,000.00 லட்சம் ரூபாய் தனது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக போனில் தகவல் வந்தது கண்டு முத்துசாமி அதிர்ச்சியடைந்தார். வங்கிக்கு சென்று உறுதி செய்து கொண்டு, கார்டை பிளாக் செய்தார். இது குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இந்நிலையில், திருப்பூர் அருகே பெருமாநல்லூர் பகுதியில் இதே போல் ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடி செய்த நபர் பிடிபட்டான். போலீசார் விசாரணையில், குமாரபாளையம் பகுதியில் முத்துசாமி வசம் மோசடியில் ஈடுபட்டது இவன்தான் என்பது உறுதியானது. இதன்படி, பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் சஹானி, 31, என்பவரை, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், காவலில் எடுத்து வந்து, விசாரணை செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Similar News