திருமண நிகழ்ச்சியில் முக கவசம் சானிடைஸர் ஏற்பாடு சமூக ஆர்வலர்கள் பாராட்டு
நாமக்கல் ஆவரங்காடு பகுதியில் இன்று காலை நடந்த திருமணத்தில், திருமண வீட்டார் அனைவருக்கும் சானிடைசர்,, முகக்கவசம் வழங்கினர். இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.;
தமிழக அரசு கொரோனா தொற்று பிரச்சனை காரணமாக திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கக் கூடாது என கடுமையான உத்தரவிட்டிருந்தது.மேலும் கிருமி நாசினி முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் திருமண நிகழ்வை நடத்த வேண்டுமெனவும் கூடுதலாக அறிவித்திருந்தது
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ஆவரங்காடு பகுதியில் இன்று காலை நடந்த ஒரு திருமணத்தில் வரவேற்பு பகுதியில் திருமணத்திற்கு வரும் அனைவரும் அணிந்து கொள்ளும் வகையில் முகக் கவசங்கள் கிருமிநாசினி சானிடைசர் ஆயிலும் வாங்கி வைத்திருந்தனர்
சானிடைஸரால் கைகளை சுத்தப்படுத்திய பிறகு மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர் இந்த செயல்பாடு சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.