குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருபுறமும் பஸ்கள் நிறுத்தத்தால் கடையினர் அதிருப்தி
குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருபுறமும் பஸ்கள் நிறுத்தத்தால் கடையினர் அதிருப்தியடைந்துள்ளனர்.;
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இரண்டு பக்கமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இடைப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் இடைப்பாடி, பள்ளிபாளையம், ஈரோடு, திருச்செங்கோடு, பழனி, சென்னை பேருந்துகள் மற்றும் மினி பஸ்கள் ஆகியன நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இரு பக்க கடைகளை மறைத்தவாறு ஒருபுறம் காய்கறி கடைகளும், மறுபுறம் அனைத்து ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் கடையினர் அதிருப்தியடைந்து வருகின்றனர். காய்கறி மார்க்கெட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பஸ் ஸ்டாண்ட் கடையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.