குமாரபாளையத்தில் மாணவி ஸ்ரீமதி உருவ படத்திற்கு அனைத்து கட்சி மலரஞ்சலி
குமாரபாளையத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.;
குமாரபாளையத்தில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உருவ படத்திற்கு அனைத்து கட்சியினர் சார்பில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவுக்கு அனைத்து கட்சியினர், பொதுநல அமைப்பினர் சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் நடைபெற்றது. ஸ்ரீமதியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, அனைவரும் மலரஞ்சலி செலுத்தி, மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்விற்கு பொதுநல கூட்டமைப்பின் செயலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தி.மு.க. நகர செயலர் செல்வம், ரவி, அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி, ரவி, பாஸ்கரன், காங்கிரஸ் சிவராஜ், தங்கராஜ், கோகுல்நாத், சிவகுமார், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி, ம.தி.மு.க. விஸ்வநாதன், சி.பி.ஐ, சி.பி.எம்., விடியல் ஆரம்பம் பிரகாஷ், தளிர்விடும் பாரதம் சீனிவாசன், சேவற்கொடியோர் பேரவை பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.