பள்ளிபாளையத்தில் நவ. 27, 28 தேதிகளில் முப்பெரும் ஜோதிட திருவிழா

பள்ளிபாளையத்தில் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் சார்பாக, முப்பெரும் ஜோதிட திருவிழா, நவ. 27 & 28 தேதிகளில் நடைபெறுகிறது.

Update: 2021-11-26 11:15 GMT

மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் பயிற்சி மையம் சார்பாக,  ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, பட்டமளிப்பு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா,  வருகின்ற நவம்பர் 27,28 சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையம், திருச்செங்கோடு ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.


இந்நிகழ்ச்சிக்கு,   குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி தங்கமணி, இந்து மக்கள் முன்னணி கட்சி ஜோதிடர் அணி மாநில செயல் தலைவர் கந்தன் அடிமை,  டாக்டர் மகரிஷி மந்த்ராச்சலம், ஜோதிட ஆசான் மகா ஞானமூர்த்தி ஆகியோர் கௌரவ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்கள்.

டாக்டர் .நெல்லை வசந்தன், டாக்டர். ஏ.சி. ரவிசந்திரன் ஆகியோர் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்கள். டிவி புகழ் யதார்த்த ஜோதிடர் செல்வி தாமு,  யோகி அன்னதான பிரபு பூபதி, மருதமலை கே. சுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஆர் .விஜயலட்சுமி, திண்டுக்கல் பி.சின்னராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து பிரபலமான ஜோதிடர்கள், ஜோதிட ஆர்வலர்கள் கலந்து கொள்கிறார்கள்.  விழா ஏற்பாடுகளை மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.ஏ. முகுந்தன் முரளி செய்துள்ளார்.

Tags:    

Similar News