ஸ்ரீ வாராஹி நவராத்திரி, மாணிக்கவாசகர் குருபூஜை

குமாரபாளையத்தில் ஆஷாட நவராத்திரி என்னும் ஸ்ரீ வாராஹி நவராத்திரி நடந்து வருகிறது.;

Update: 2024-07-09 15:30 GMT

குமாரபாளையம் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை தினத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

குமாரபாளையத்தில் ஆஷாட நவராத்திரி எனும் ஸ்ரீ வாராஹி நவராத்திரி நடந்து வருகிறது.

குமாரபாளையம் மங்களாம்பிகை உடனமர் மகேஸ்வரர் கோவிலில் ஆஷாட நவராத்திரி எனும் ஸ்ரீ வாராஹி நவராத்ரி, ஜூலை 6ல் துவங்கி, 15 வரை ஒன்பது நாட்கள் நடைபெறவுள்ளது. பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி லட்சுமி, சரஸ்வதி, துர்கை, என முப்பெரும் தேவியரை வழிபாடு செய்வது நமது பாரம்பரிய வழக்கம்.

அதே போல ஆஷாட மாதத்தில் வளர்பிறையில் வரும் நவராத்ரி ஸ்ரீ வாராஹி அம்பாளுக்குரிய நவராத்ரியாகும். இந்த ஒன்பது நாட்கள் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மிக உகந்த நாட்கள் ஆகும். எனவே இந்த நாட்களில் அம்மனை தரிசனம் செய்து நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், துன்பமில்லாத வாழ்வும், கிடைக்கப்பெறும்.

ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இந்த 9 நாட்களும் மாலை 5:30 மணியளவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதே கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை தினத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.

Similar News