அருவங்காடு உயர்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது: ஆட்சியர் வழங்கல்

குமாரபாளையம் அருகே சிறந்த பள்ளிக்கான விருதை அருவங்காடு உயர்நிலைப்பள்ளிக்கு கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-08-16 15:15 GMT

குமாரபாளையம் அருகே அருவங்காடு உயர்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளியாக தலைமை ஆசிரியர் வெற்றிவேலிடம் கலெக்டர் ஸ்ரேயா சிங்  விருது வழங்கினார்

அருவங்காடு உயர்நிலைப்பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு- கலெக்டர் விருது வழங்கினார்

குமாரபாளையம் அருகே அருவங்காடு உயர்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளியாக கலெக்டர் விருது வழங்கினார்.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட அருவங்காடு அரசு உயர்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் வெற்றிவேலிடம் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் பரிசு வழங்கினார். சிறந்த முறையில் பாடங்கள் நடத்துதல், ஆங்கில பயிற்சி வகுப்பு, கராத்தே பயிற்சி வகுப்பு, திருக்குறள் வகுப்பு, திறனறி தேர்வுகள் நடத்தி மாணவர்களுக்கு தேர்வு அச்சம் போக்குதல், கட்டுரை, பேச்சு, ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தனித்திறமைகள் ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த பரிசு வழங்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள் பலரும், ஊர் மக்களும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



Tags:    

Similar News