குமாரபாளையத்தில் ஓவியர் சங்க ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில், ஓவியர் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் ஓவியர் சங்கம் சார்பில் சங்க தலைவர் கதிரவன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் டிசம்பர் 11ல் பாரதி பிறந்த நாள் கொண்டாடுவது, அந்த நாளில் திரைப்பட நடிகரும், ஓவியருமான சாப்ளின் பாலு தலைமையில், நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், பாரதியார் பிறந்த நாளில், ஓவியர் சங்க பெயர் பலகை திறந்து வைத்தல், மரக்கன்று நடுதல், சங்க கொடிக்கம்பம் நடுதல், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதல், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தமிழ்நாடு தேர்தலில், நகர் புறங்களில் சுவர் விளம்பரம் எழுத அனுமதி வழங்க வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் பாரதியார் பிறந்த நாள் விழா சம்பந்தமாக, குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது. தலைவர் கதிரவன், நிர்வாகிகள் சிங்காரவேல், பாஸ்கரன், குணசேகரன், ரவிச்சந்திரன்,மாணிக்கம் உள்பட பலர், இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.