குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லை : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரசு மருத்துவமனை வளாகம் பகுதிகளில், சாதாரணமாக தெருநாய்கள் சுற்றுவதால், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க,சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-06-20 12:15 GMT

குமாரபாளையம் அரசு மருத்துவமனை வளாகப் பகுதியில், தெரு நாய்கள் சுற்றி திரிவதை படத்தில் காணலாம்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பவானி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை பிரிவும், இந்த பகுதியில் செயல்பட்டு வருவதால் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இந்நிலையில்,அரசு மருத்துவமனை வளாகம் பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் தெருநாய்கள் அதிக அளவில் உள்ளே சுற்றித் திரிகின்றன.

இங்கு சுற்றித் திரியும் தெருநாய்கள் பொதுமக்களை, நோயாளிகளை, அச்சுறுத்தும் வகையில்  ஆட்களைக் கண்டால் குரைத்து , கூட்டமாக சேர்ந்து கொண்டு அங்குள்ள நோயாளிகளை மிரட்டி வருகின்றன. குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து,தெருநாய்களை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும். குமாரபாளையம் அரசு மருத்துவமனை பாதுகாப்பு மிகுந்த பகுதியாக மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags:    

Similar News