குமாரபாளையம் சமூக சேவகிக்கு அறம் விருது
குமாரபாளையம் சமூக சேவகிக்கு அறம் விருது வழங்கப்பட்டது.;
குமாரபாளையம் சமூக சேவகிக்கு அறம் விருது
குமாரபாளையம் சமூக சேவகிக்கு அறம் விருது வழங்கப்பட்டது.
குமாரபாளையம் நகரில் உள்ள லிட்டில் ஹான்ட்ஸ் பொதுநல அமைப்பின் நிறுவனர் பூங்கொடி, ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பாடங்கள் கற்பித்தல், ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவித் தொகை, வழங்குதல், யோகா பயிற்சி வழங்குதல், ஓவியப் பயிற்சி மற்றும் பல்வேறு விளையாட்டு பயிற்சி இலவசமாக வழங்கி வருகிறார்.
இவரது சேவையை பாராட்டி, சென்னை அறம் அமைப்பினர் சார்பில் அறம் சேவை விருதுக்கு பூங்கொடி தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவில், இந்த விருதினை பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தம், திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் பூங்கொடியின் தாயார் மல்லிகாவிடம் வழங்கினர். விருது பெற்ற பூங்கொடியை முக்கிய பிரமுகர்கள், பொதுநல ஆர்வலர்கள் பாராட்டினர்.
ஓவியப் போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்
குமாரபாளையத்தில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவ, மாணவியர் சாதனை படைத்தனர்.
குமாரபாளையம் சன்ரைஸ் அகாடமி, லிட்டில் ஹான்ட்ஸ் பொதுநல அமைப்பின் சார்பில் ஓவியம், கைவினை பொருட்கள் பயிற்சி, யோகா, உடல்நலம் காக்கும் விழிப்புணர்வு பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று வயது முதல் பல்வேறு வயது பிரிவின் கீழ் ஓவியப்போட்டிகள் அமைப்பாளர் பூங்கொடி தலைமையில் நடந்தது.
கராத்தே பயிற்சியாளர் பாஸ்கரின் ஷேடோகாய் கராத்தே டூ இன்டர்நேஷனல் ரகுவா சிட்டோரியா அமைப்பின் சார்பில், பயிற்சி மாணவர்கள் கராத்தே சாதனைகள் செய்து காட்டினர். 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர். சிறந்த ஓவியங்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் பரிசுகள் என ஒவ்வொரு வயது பிரிவின் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டன.