பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு

மகாராஷ்டிராவில் பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2022-08-10 16:00 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. அலுவலராக பணியாற்றி வந்தவர் அந்தோணிசாமி (வயது 35.) இவர் என்.சி.சி. இரண்டாம் நிலை அலுவலருக்கான 20 நாட்கள் பயிற்சிக்காக மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூருக்கு சென்று, பயிற்சி முடிந்து திரும்பி வந்தார். இவருக்கு பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. பி.டி.ஏ. தலைவர் வெங்கடேசன், பொருளாளர் சுப்ரமணியம், நிர்வாகிகள் அன்பரசு, ராஜேந்திரன், ராஜ்குமார், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவியர் சால்வை அணிவித்து பாராட்டினர். அந்தோணிசாமி தனது பயிற்சி அனுபவங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்.

Tags:    

Similar News