குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம், அணில் நிறுவனத்தாரின் பட்டாசுத் திருவிழா
குமாரபாளையத்தில் அபெக்ஸ் சங்கம் மற்றும் அணில் பட்டாசு நிறுவனம் இணைந்து பட்டாசு திருவிழாவை நடத்தினர்.
குமாரபாளையம், பள்ளிபாளையம் சாலை காலனி மருத்துவமனை பாலம் அருகில், அபெக்ஸ் காலனி செல்லும் நுழைவுப்பகுதியில் அபெக்ஸ் சங்கம் மற்றும் அணில் பட்டாசு நிறுவனம் இணைந்து பட்டாசு திருவிழா நடைபெற்று வருகிறது.
இது குறித்து சங்கத் தலைவர் பிரகாஷ் கூறுகையில், அபெக்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்து வருகிறோம். இந்த சேவை பணிகள் தொடர்ந்து செய்திட இந்த பட்டாசு கடை வருமானம் பயனுள்ளதாக இருந்து வருகிறது.
இதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் சேவைத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. ஆகவே பொதுமக்கள் தாங்களும் சேவைப்பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள, எங்களது அபெக்ஸ் சங்க பட்டாசு கடையில் வாங்கி உதவ வேண்டுகிறோம்.
மேலும் குமாரபாளையம் மற்றும் பல பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பிடம், உணவு தயாரிக்கும் அறை உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை நாங்கள் கட்டிக் கொடுத்துள்ளோம். தற்போது கலியனூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கட்டிடம் கட்டித் தர பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இது தவிர ஆண்டு முழுவதும் 24 இலவச மருத்துவ சிகிச்சை முகாம்கள், கால்நடை இலவச மருந்துவ முகாம், ரத்த வகை தேவைப்படுவோருக்கு உடனடியாக ரத்த வகை ஏற்பாடு செய்து தருதல் உள்ளிட்ட பல சேவைகள் நடைபெற்று வருகிறது. இங்கு பட்டாசு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறோம் என அவர் கூறினார்.