குமாரபாளையத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டிய ஓட்டல் அதிபர் கைது
குமாரபாளையத்தில் அனுமதியின்றி 27 மரங்கள் வெட்டிய ஓட்டல் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் 27 மரங்கள் வெட்டப்பட்டிருப்பது கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி வி.ஏ.ஒ. முருகன் ,மற்றும் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோரிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கத்தனர்.
போலீசார், விஏஓ, பொதுப் பணித்துறையினர் நேரில் வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் மரங்களை வெட்ட சொன்னது குமாரபாளையம் பஞ்சாபி தாபா ஓட்டல் கடை உரிமையாளர் சுந்தரமூர்த்தி, 41, என்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இவர் சொல்லி மரங்களை வெட்டிய கோட்டைமேடு பகுதியை சேர்ந்த மாரியப்பன், 45, என்பவர் தலைமறைவானதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.