அரசு பள்ளியில் ஆண்டு விழா
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.;
அரசு பள்ளியில்
ஆண்டு விழா
குமாரபாளையம் அருகே அரசு பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வேமன்காட்டுவலசு, ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. தலைமை ஆசிரியை விஜயசாமுண்டீஸ்வரி ஆண்டறிக்கை வாசித்து, தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தட்டான்குட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் புஷ்பா, நாச்சிமுத்து, வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், பி.டி.ஏ. தலைவர் தேவராஜ், உள்பட பலர் பங்கேற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
படவிளக்கம் :
குமாரபாளையம் அருகே குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வேமன்காட்டுவலசு, ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.