போதை ஒழிப்பு விழிப்புனர்வு பேரணி, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா!

குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புனர்வு பேரணி, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.;

Update: 2025-01-07 10:30 GMT

குமாரபாளையத்தில் சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம், தமிழ் சிந்தனை பேரவை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புனர்வு பேரணி, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது 

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா

குமாரபாளையத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

குமாரபாளையம் சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம், தமிழ் சிந்தனை பேரவை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா அமைப்பின் தலைவர்கள் பிரபாகரன், ரமேஷ்குமார் தலைமையில் நடந்தது. காவேரி நகர் காவிரி பாலம் முன்பு துவங்கிய பேரணியை, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணி இடைப்பாடி சாலை, சேலம் சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி வழியாக தனியார் மண்டபத்தில் நிறைவு பெற்றது. போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும், விழிப்புணர்வு கோஷங்கள் போட்டவாறும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தியவாறும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர் பெருமளவில் பேரணியில் பங்கேற்றனர்.

கேரளாவில் ஏ.டி.எம். இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து வந்த கொள்ளையர்களை துப்பாக்கியால் சுட்டு பிடித்த குமாரபாளையம் போலீசார் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. தங்கவடிவேல், ஏட்டுக்கள் ராம்குமார், உள்ளிட்ட 7 பேருக்கு, சால்வை அணிவித்து, நினைவுப்பரிசு, பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. 35 ஆண்டுகள் இசைத்துறையில் ஈடுபட்டு, மூன்று மணி நேரம், முப்பது நிமிடங்கள் இடைவிடாது பாட்டுக்கள் பாடி நோபிள் வோர்ல்ட் நிகார்ட்ஸ் இல் இடம் பிடித்து சாதனை படைத்த சிவசுப்ரமணியனுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags:    

Similar News