அன்பழகன் நூற்றாண்டு விழா: குமாரபாளையம் திமுகவினர் கொண்டாட்டம்

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-12-19 15:15 GMT

குமாரபாளையம் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

பேராசிரியர் க. அன்பழகன் தமிழக முதிர்ந்த அரசியல்வாதியும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர், தமிழக தி.மு.க. அரசின் அமைச்சரவையில், பல்வேறு காலகட்டங்களில், நிதி, கல்வி, சுகாதார, சமூக நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 1977 முதல் 2020ல் தான் இறக்கும் வரை இருந்துள்ளார்.

இவர், 2020 மார்ச் 7ம் நாள் தம்முடைய 97 ஆம் வயதில், சென்னையில் காலமானார். இவர் இனமானப் பேராசிரியர் என அழைக்கப்பட்டார். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 75 ஆண்டு கால நண்பராக இருந்தவர். இவரது நூற்றாண்டு விழா நேற்று குமாரபாளையம் தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் நகரமன்ற தலைவர் ஜெகன்னாதன் துவக்கி வைத்தார். அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மாணிக்கம், இளவரசு, செல்வராஜ், விஜய்கண்ணன், அன்பரசு, ராஜ்குமார், ரவி, மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News