அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாட்டம்..!

குமாரபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-02-08 04:43 GMT

குமாரபாளையம் புத்தர் தெரு தொடக்கப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

குமாரபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் புத்தர் தெரு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தவர்கள், மாணவ, மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட இலக்கிய போட்டிகள், கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பி.டி.ஏ. தலைவர் வாசுதேவன் பரிசுகள் வழங்கினார்.

கவுன்சிலர் வள்ளியம்மாள், முன்னாள் தலைமையாசிரியை முத்தமிழ்செல்வி, பி.டி.ஏ, நிர்வாகிகள் பிரபாத் மகேந்திரன், பாலசுப்ரமணி, மாதேஸ்வரன், முருகன், தண்டபாணி, பாலமுருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை விசாலாட்சி நன்றி கூறினார்

குமாரபாளையம் அரசு பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவின்படி ஆண்டுதோறும் 6முதல் 12 ஆம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. குமாரபாளையம் அருகே உள்ள அருகே உள்ள வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வி தலைமை வகித்தார்.

தி.மு.க. ஒன்றிய செயலாளர் நாச்சிமுத்து தொடங்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் சௌந்தரராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காந்தி நாச்சிமுத்து முன்னிலை வகித்தனர்.6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு கவின் கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய பிரிவுகளில் 33 வகையான போட்டிகள் நடைபெற்றன. .9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு கவின் கலை

இசை, வாய்ப்பாட்டு, கருவி இசை, தோல் கருவி நடனம், நாடகம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் 74 வகையான போட்டிகள் நடைபெற்றன.

Tags:    

Similar News