அரசு பள்ளியில் முப்பெரும் விழா

பள்ளிபாளையம் நகராட்சி அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.;

Update: 2025-03-28 17:21 GMT

அரசு பள்ளியில்

முப்பெரும் விழா


பள்ளிபாளையம் நகராட்சி அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

பள்ளிபாளையம் நகராட்சி ஆவரங்காடு தொடக்கப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர் .

இந்த பள்ளி துவக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, ஐம்பதாம் ஆண்டு பொன்விழா, பள்ளி ஆண்டு விழா, முன்னாள் மாணவ மாணவி சந்திப்பு ,உள்ளிட்ட முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை லோகநாயகி தலைமை வகித்தார். சுமார் 50 ஆண்டுகளில் கல்வி பயின்ற முன்னாள் மாணவ ,மாணவியர், கல்வி கற்பித்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஆசிரியர்கள், உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் 50,000 ரூபாய் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள், உள்ளிட்டவை சீராக வழங்கப்பட்டது .

மேலும் அரசு பள்ளியில் நமது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் முறையில், கல்விச்சீருடன் பள்ளிபாளையம் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவு பெற்றது .

இதனை அடுத்து முன்னாள் மாணவ மாணவியர்களுக்கு ஆசிரியர்களுக்கு, நினைவுப் பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது . குழந்தைகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் செல்வராஜ், துணை தலைவர் பாலமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், முன்னாள் மாணவ மாணவியர், பள்ளி குழந்தைகளின் பெற்றோர் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

பள்ளிபாளையம் நகராட்சி அரசு பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

Similar News