திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

குமாரபாளையம் திமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-09-15 17:30 GMT

அண்ணா பிறந்த நாள் விழாவையொட்டி, அண்ணா சிலைக்கு நகர பொறுப்பாளர் செல்வம் மாலை அணிவித்தார்.

குமாரபாளையம் திமுக சார்பில் நகர செயலர் நாகராஜன் தலைமையில், மெயின் ரோடு கட்சி அலுவலகத்தில் இருந்து டூவீலரில் ஊர்வலமாக புறப்பட்டு, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள், முககவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் அன்பரசு, ஜெயபிரகாஷ், அன்பழகன், ராஜ்குமார், ரவி, உள்பட பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News