குமாரபாளையத்தில் அமமுகவினரின் அண்ணா பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-09-16 02:46 GMT

குமாரபாளையத்தில் அ.ம.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் அ.ம.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நகர செயலர் ஒபுளிசாமி தலைமையில் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, பயணியர் மாளிகை வளாகத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் அவைத்தலைவர் வெங்கடேசன், நிர்வாகிகள் தனபால், சம்பத்குமார், கதிர்ராஜ், லட்சுமணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News