தேமுதிக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா
குமாரபாளையம் தேமுதிக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் தேமுதிக சார்பில் நகர செயலர் ராஜு தலைமையில், மாவட்ட செயலர் விஜய் சரவணன் பங்கேற்று மெயின் ரோடு கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, புதிய தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள், முககவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மகாலிங்கம், மணியண்ணன், செல்வராஜ் உள்பட பலரும் பங்கேற்றனர்.