குமாரபாளையத்தில் அண்ணா பிறந்தநாள்: சிலைகளை தூய்மைபடுத்திய நகராட்சி பணியாளர்கள்

குமாரபாளையத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நகராட்சி பணியாளர்கள் சிலைகளை தூய்மைபடுத்தினர்.;

Update: 2021-09-14 15:00 GMT

குமாரபாளையம் புதிய தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலை நகராட்சி பணியாளர்களால் தூய்மைப்படுத்தப்பட்டது.

செப்டம்பர் 15ல் முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாள் தமிழகம் மற்றும் இதர மாநிலங்களில் தி.மு.க. அ.தி.மு.க, ம.தி.மு.க., தே.மு.தி.க., அ.ம.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கொண்டாடுவது வழக்கம். அ.தி.மு.க. சார்பில் நகர செயலர் நாகராஜன் தலைமையில் ஊர்வலமாக வந்து சென்று அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது நடைமுறையாக இருந்து வந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊர்வலத்தை தவிர்த்து, செப்.15 காலை 09:30 மணியளவில் டூவீலரில் அக்கட்சியினர் புதிய தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.

இதே போல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. இதனையொட்டி இரு இடங்களில் உலா அண்ணாவின் திருவுருவச்சிலைகள் தூய்மை படுத்தப்பட்டது.

Tags:    

Similar News