பள்ளிபாளையத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, இன்று பள்ளிபாளையம் திமுகவினர், முட்டை பிரியாணி உணவு வழங்கினர்.;
பள்ளிபாளையத்தில், பொது மக்களுக்கு உணவு வழங்கிய திமுகவினர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு திமுக சார்பில், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரைக்கேற்ப, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, மதிய உணவு வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை, எளிய மக்களுக்கு, முட்டை பிரியாணி உணவை திமுகவினர் வழங்கினர். ஏராளமான முன்னணி திமுகவினர், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.