நடராஜா பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம்

குமாரபாளையத்தில் நடராஜா பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2024-07-12 14:15 GMT

படவிளக்கம் :

ஆனி திருமஞ்சனம் விழாவையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் நடராஜர் மற்றும் மங்களாம்பிகை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன.

நடராஜா பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம்

குமாரபாளையத்தில் நடராஜா பெருமானுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆனி திருமஞ்சனம் விழாவையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் நடராஜர் மற்றும் மங்களாம்பிகை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். சிவாய நமஹா, ஓம் சக்தி என்ற சரண கோஷத்துடன் சுவாமிகளுடன் கோவிலை பக்தர்கள் சுற்றி வலம் வந்தனர். இதே போல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

ஆனி திருமஞ்சனம் என்பது சிவாலயங்களில் நடராசருக்கு ஆனி மாதத்தில் அபிசேகம் செய்யப்படும் நாளாகும். ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று இந்நாள் கொண்டாடப்படுகிறது. சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆனி உத்திரத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆனி திருமஞ்சனத்தன்று நடராசருக்கு அபிசேகங்கள் செய்யப்படுகின்றன.

Tags:    

Similar News