அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்
கண்டன ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகி அசோகன் தலைமையில் நடந்தது. இதில் தொழிலாளர்கள் கொத்தடிமையாக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடக் கோரியும்,
அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டியும், காண்ட்ராக்ட்,கேசுவல், தினக்கூலி திட்ட பணியாளர் அனைவரும் நிரந்தரமாக்குதல், முறைசாரா தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்கக்கோரியும், வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்குதல், அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் ஓய்வூதியம் வழங்க வேண்டியும்,
புதிய பென்ஷன் ஒருங்கிணைந்த பென்சனை தவிர்த்து, பழைய பென்சனை மீண்டும் கொண்டு வரக்கோரியும், உணவு, மருந்து, விவசாய விளைப் பொருள்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு வழங்குதல், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை குறைத்திட, பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் சீர்குலைவை நிறுத்த, கனிம வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தராமல், உள்ளூர் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்த கோருதல், விவசாய விளைபொருட்களுக்கு செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதாரம் விலை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்தல், மின்சார மின் துறையை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மின்சார சட்டம் 2022 கைவிட கோருதல், உள்ளிட்ட
பல கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் நஞ்சப்பன், தங்கராஜ், நீலகண்டன், வெங்கடேஷ், பாலுசாமி, செல்வராஜ், சண்முகம், காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட அமைப்பாளர் சித்ரா, தமிழ்த்தேசிய பேரியக்கம் ஆறுமுகம், உள்பட பலர் பங்கேற்றனர்.
படவிளக்கம் :
அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.