குமாரபாளையத்தில் அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம்

குமாரபாளையம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2022-06-24 14:30 GMT

அ.ம.மு.க. நகர செயலராக நியமனம் செய்யப்பட்ட ஒபுளிசாமிக்கு தொழிலதிபர் வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார்.

குமாரபாளையம் அ.ம.மு.க. புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அ.ம.மு.க. பொதுச்செயலர் தினகரன் உத்திரவின்படி குமாரபாளையம் பகுதியில் நகர செயலராக ஒபுளிசாமி, மாவட்ட மாணவரணி செயலராக சம்பத்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற சார்பு அணி செயலராக தனபால் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க தொழிலதிபர் வெங்கடேசன் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News