குமாரபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் வழங்கல்
குமாரபாளையத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் வழங்கினர்.;
குமாரபாளையம் ஜே.கே.கே.முனிராஜா பார்மசி கல்லூரியில் 1989-90ல் படித்த மாணவ, மாணவியர்கள் சந்திப்பு நிகழ்வு தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இதில் பலர் அரசு பணியிலும், பலர் தனியார் மருத்துவமனைகளிலும், மேலும் பலர் தனியார் மருந்து கடைகளிலும் பணியாற்றி வருகின்றனர்.
தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பத்தார் பற்றியும் அறிமுகப்படுத்திகொண்ட இவர்கள், படிக்கும் போது நடந்த நிகழ்வுகளை ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்தனர். தங்களது ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பின் நினைவாக கல்லூரியின் பின்புறம் உள்ள அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உடைகள் மற்றும் அன்னதானம் வழங்கினர். இதில் மோகன், குணபால், சாந்தி, அருள், மால்மருகன், சாந்தி, விஜயலட்சுமி, கஸ்தூரிதங்கம், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.