குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1974 - 1981 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.;
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த 1974 - 1981 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு.
இதில் தாங்கள் படிக்கும் தருணத்தில் நடந்த நிகழ்வுகளை அவர்கள் நினைவு கூர்ந்தனர். தற்போது ஒவ்வொருவரும் பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், செய்து வரும் தொழில்கள் குறித்தும் முன்னாள் மாணவர்கள் பேசினர்.
இந்த சந்திப்பு ஆண்டுதோறும் நடத்துதல், தங்களால் ஆன உதவியை ஏழை மாணவ, மாணவியர்களுக்கு வழங்க வேண்டும். கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு உதவிட வேண்டும். கொரோனா போன்ற தொற்று நோய் பரவும் காலங்களில் நோயால் பாதிக்கப்பட்டோருக்கும், நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தார்க்கும் உதவிட வேண்டும். தாங்கள் படித்த பள்ளிக்கு தங்களால் ஆன உதவியை செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.